உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இந்திய பாஸ்போர்ட்டில் பயணம் வங்கதேச நபர் ஏர்போர்ட்டில் கைது

இந்திய பாஸ்போர்ட்டில் பயணம் வங்கதேச நபர் ஏர்போர்ட்டில் கைது

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று, அபுதாபி செல்ல முயன்ற வங்க தேசம் வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை விமான நிலையத்தில், நேற்று முன்தினம் குடியுரிமை அதிகாரிகள் ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபிக்கு செல்லும் பயணியரின் ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது உத்தம் குமார், 25, என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. பாஸ்போர்ட் தகவல்களை வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில், வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் குடியுரிமை அதிகாரிகள் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில், கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததும், மேற்கு வங்கத்தில் வசித்து, உத்தம் உராவ் என பெயரை மாற்றி ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்ததும் தெரியவந்தது. பின் அவற்றை வைத்து, இந்திய பாஸ்போர்ட் பெற்று அபுதாபி செல்ல முயன்றது தெரியவந்தது. நேற்று அவரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி