உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இந்திய கடற்படை மாரத்தான் ஸ்பான்சர் ஆன பரோடா வங்கி

இந்திய கடற்படை மாரத்தான் ஸ்பான்சர் ஆன பரோடா வங்கி

சென்னை: இந்திய கடற்படை சார்பில், சென்னையில் முதன் முறையாக, டிச., 14ல், 'சென்னை அரை மாரத்தான்' என்ற பெயரில் மாரத்தான் நடக்கிறது. இதற்கு, பாங்க் ஆப் பரோடா ஸ்பான்சர் வழங்கியுள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது, பாங்க் ஆப் பரோடா, சென்னை மண்டல பொது மேலாளர் டி.என்.சுரேஷ், தமிழகம் மற்றும் புதுச்சேரி இந்திய கடற்படை அதிகாரி கமாண்டர் சுரவத் மகோன், காவேரி மருத்துவமனை மருத்துவ இயக்குநர் மற்றும் தலைமை கதிரியக்க நிபுணர் டாக்டர் அய்யப்பன் பொன்னுசாமி மற்றும் இந்திய கடற்படை அரை மாரத்தான் போட்டி மேலாண்மை கூட்டாளர் நாகராஜ் அடிகா ஆகியோர் இணைந்து, போட்டி தின டி - ஷர்ட்டை வெளியிட்டனர். இது குறித்து சென்னை மண்டல பொது மேலாளர் டி.என்.சுரேஷ், கூறியதாவது: இந்திய கடற்படை அரை மாரத்தான் போட்டியின் தலைமை ஸ்பான்சராக இருப்பதில், 'பாங்க் ஆப் பரோடா' பெருமைப்படுகிறது. 'போதைப் பொருள் இல்லாத இந்தியா, பெண்கள் வலிமை, ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு' போன்றவற்றை இந்த மாரத்தான் முன்னெடுக்கிறது. மூன்று பிரிவுகளில் நடக்க உள்ள போட்டியில், மொத்தம், 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !