மேலும் செய்திகள்
பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு
02-Apr-2026
திருமங்கலம்: திருமங்கலத்தில் உள்ள தனியார் மதுக்கூடத்தில், மதுரை, விளாங்குடியைச் சேர்ந்த பரத்சித்தன், 24, என்பவர், கடந்த 5ம் தேதி, மது அருந்தி கொண்டிருந்தார். அங்கு, டிவியில் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்த நான்கு பேர், சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை பரத் சித்தன் கண்டித்ததால், தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த மது பாட்டிலால், பரத்சித்தனை தாக்கி, நால்வரும் தப்பினார். திருமங்கலம் போலீசார் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட அம்பத்துாரை சேர்ந்த குப்பன், 36, ரமேஷ், 37, ஆகிய இருவரை கைது செய்தனர்; மற்றவர்களை தேடுகின்றனர்.
02-Apr-2026