மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவரிடம் ரூ.2.50 லட்சம் மோசடி
19-Mar-2025
பெரம்பூர், பீஹாரைச் சேர்ந்தவர் அசோக் யாதவ், 35. இவர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் தங்கி கட்டட தொழில் செய்து வருகிறார்.சொந்த ஊருக்கு செல்வதற்காக, நேற்று காலை 9:00 மணியளவில், பெரம்பூர் ரயில் நிலையம் வந்தார். அப்போது மர்மநபர் ஒருவர், அசோக் யாதவிடம் அணுகி, டிக்கெட் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.அவரது பேச்சை நம்பிய அசோக் யாதவை, ரயில் நிலையம் அருகேயுள்ள பூங்காவிற்கு மர்ம நபர் அழைத்து சென்றுள்ளார். இதையடுத்து, 'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனை செயலியான 'ஜீபே' வாயிலாக 20,000 ரூபாய், அவரது கையில் இருந்த 8,000 ரூபாய் மற்றும் மொபைல் போனை வாங்கிக் கொண்டு, சிறிது நேரத்தில் டிக்கெட் உடன் வருவதாக கூறி சென்றுள்ளார். அதன் பின் மதியம் வரை திரும்பி வரவில்லை. அப்போது, தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அசோக் யாதவ், செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
19-Mar-2025