பைக் திருடன் கைது
சென்னை, நவ. 27-பெரியமேடு, பேரக்ஸ் சாலையைச் சேர்ந்தவர் முஹம்மது பகீம், 45; துணிக்கடை நடத்தி வருகிறார்.கடந்த, 23ல் பெரியமேடு வீராசாமி தெருவில், தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி, வாடிக்கையாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனம் திருடுபோனது தெரியவந்தது. பெரியமேடு போலீசார் விசாரித்து, இருசக்கர வாகனத்தை திருடிய கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த செல்வம், 38, என்பவரை, நேற்று கைது செய்தனர்.