உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிளேஸ் வாலிபால் லீக்: பெரம்பூர் டான்பாஸ்கோ முன்னிலை

பிளேஸ் வாலிபால் லீக்: பெரம்பூர் டான்பாஸ்கோ முன்னிலை

சென்னை,பள்ளிகளுக்கு இடையிலான 'பிளேஸ்' வாலிபால் போட்டியில், பெரம்பூர் டான்பாஸ்கோ அணி முன்னிலையில் உள்ளது.மாநிலத்தில் முதல் முறையாக, 'பிளேஸ் வாலிபால் லீக்' முதலாவது சீசன் போட்டி, சென்னையில் பல்வேறு பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.இந்த சீசனில் செயின்ட் பீட்ஸ், செயின்ட் மேரீஸ், மாண்ட்போர்டு, டான்பாஸ்கோ,- கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ., -சேது பாஸ்கரா, செயின்ட் பீட்டர்ஸ் என, எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள், 'லீக்' முறையில், ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு பள்ளிகளில் நடக்கின்றன. நேற்று முன்தினம் பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளியில், லீக் போட்டிகள் நடந்தன.முதல் போட்டியில் டான் பாஸ்கோ மற்றும் ஒய்.எம்.சி. ஏ., அணிகள் மோதின. விறுவிறுப்பான போட்டியில் 25 - 16, 25 -- 20, 25 -- 20 என்ற 3 -- 0 'செட்' கணக்கில், டான்பாஸ்கோ அணி வெற்றி பெற்றது.தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் பெரம்பூர் டான்பாஸ்கோ அணி ஆலந்துார் ஏ.ஜி.எஸ்., அணியுடன் மோதியது. அதில் 25 -- 12, 25 -- 16, 25 - - 15 என்ற கணக்கில், டான்பாஸ்கோ அணி வெற்றி பெற்றது. இதுவரை நடந்த அனைத்து லீக் போட்டிகள் முடிவில், பெரம்பூர் டான்பாஸ்கோ அணி 28 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது. அதைத் தொடர்ந்து ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் அணி 23 புள்ளிகள் பெற்று இரண்டாமிடமும், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் அணி 22 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்திலும், அம்பத்துார் சேது பாஸ்கரா பள்ளி, 20 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்திலும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை