உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கால்வாயில் வீசப்பட்ட குழந்தை சடலம் மீட்பு

கால்வாயில் வீசப்பட்ட குழந்தை சடலம் மீட்பு

சென்னை, பட்டினப்பாக்கத்தில், லீலா பேலஸ் ஓட்டல் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் கவர் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.தகவல் அறிந்து, பட்டினப்பாக்கம் போலீசார், பிளாஸ்டிக் கவரை பிரித்து பார்த்தபோது, இறந்த நிலையில், ஆண் குழந்தை சடலம் இருந்தது.பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். குழந்தையை கொன்று, பிளாஸ்டிக் கவரில் சுற்றி கால்வாயில் வீசியது யார் என்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ