உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அசோக் நகரில் வாலிபர் உடலில் தீப்பற்றி இறப்பு

அசோக் நகரில் வாலிபர் உடலில் தீப்பற்றி இறப்பு

அசோக் நகர், அசோக் நகர், புதுாரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதன் வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு துறையின், மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது.நேற்று முன்தினம் இரவு, விடுதி மாணவர்கள் துாங்கினர். அப்போது, வளாகத்திற்குள் அலறல் சத்தம் கேட்டது.அதிர்ச்சியில் கண் விழித்த மாணவர்கள் வெளியே வந்து பார்த்த போது, அங்கு 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், உடலில் தீப்பற்றிய நிலையில் சரிந்து விழுந்தார்.இதுகுறித்து அசோக் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அங்கு போலீசார், இளைஞர் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.தீப்பற்றிய இளைஞர் யார், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் தீ வைத்து கொளுத்தினார்களா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ