உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 4 நடிகர்கள் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

4 நடிகர்கள் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சத்யராஜ், கார்த்திக், நாசர், அமீர் ஆகிய நான்கு நடிகர்கள் வீட்டிற்கு, இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, நேற்று காலை இ-மெயில் வந்துள்ளது. அதில், சத்யராஜ், கார்த்திக், நாசர், அமீர் உள்ளிட்ட நடிகர்கள் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. போலீசாரின் தகவலையடுத்து, மோப்ப நாயுடன் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள், சோதனை நடத்தினர். எந்தவித வெடி பொருட்களும் கிடைக்காததால் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ