மேலும் செய்திகள்
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
09-Oct-2024
சென்னை, புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில் தெருவில், 'செக்யூரிட்டி சென்னை போலீஸ்' கட்டுப்பாட்டு அறை உள்ளது.இங்கு, நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, அண்ணா சாலை ஆயிரம்விளக்கில் உள்ள மசூதியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறுஞ்செய்தி வந்தது.இதுகுறித்து, அண்ணாசாலை இன்ஸ்பெக்டர் மோகன்தாசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராமச்சந்திரன் தலைமையிலான வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் லிஸ்ஸியுடன் சென்று, மசூதி முழுதும்சோதனை செய்தனர்.ஒரு மணி நேரம் சோதனை நடத்தியும், வெடிப்பொருட்கள் ஏதும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
09-Oct-2024