உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3 இடங்களில் குண்டு மிரட்டல்

3 இடங்களில் குண்டு மிரட்டல்

சென்னை ;சென்னையில் மூன்று இடங்களில் நேற்று வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்துள்ளது, தொடரும் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நுங்கம்பாக்கம், எஸ்.பி.ஐ., வங்கிக்கு நேற்று காலை வந்த இ - மெயிலில், வங்கி மட்டுமின்றி நடிகர் எஸ்.வி.சேகர் வீடு, அம்பத்துாரில் உள்ள சிட்டி யூனியன் வங்கியிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மிரட்டல் விடுக்கப்பட்ட மூன்று இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் எந்தவித வெடிப்பொருட்களும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. தொடர்ந்து, மிரட்டல் விடுத்த நபரின் இ - மெயில் ஐ.டி.,யை பயன்படுத்தி, அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். சென்னையில் சமீபகாலமாக, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று முன்தினம் ஐந்து இடங்களில் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், நேற்று மூன்று இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி