ரத்த புற்றுநோயாளிக்கு எலும்பு மஜ்ஜை சிகிச்சை
சென்னை:ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, 29 வயது பெண்ணுக்கு, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்து, காவேரி மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.இதுகுறித்து, மருத்துவமனையின் புற்றுநோயியல் துறை இயக்குநர் வைத்தீஸ்வரன், ரத்த புற்றுநோயியல் துறை நிபுணர் அர்ஷத் ராஜா ஆகியோர் கூறியதாவது:தீவிர ரத்த புற்றுநோயுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், 29 வயது பெண் போராடி வந்தார். அவருக்கு, முழுமையான எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மற்றும் ஊடுகதிர் சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டது.பின், அவரது சகோதரியிடம் எலும்பு மஜ்ஜை தானமாக பெறப்பட்டது. மருத்துவமனையில் உள்ள அதிநவீன கதீர்வீச்சு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்ய, தொற்று தடுப்புக்கு அவசியமான அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டன. மிகவும் சவால் நிறைந்த இச்சிகிச்சையில், நோயாளிக்கு தீர்வு கிடைத்துள்ளது. தற்போது நோயாளி நலமுடன் உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.