உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமியை மிரட்டி பணம், நகை பறித்த சிறுவன் கைது

சிறுமியை மிரட்டி பணம், நகை பறித்த சிறுவன் கைது

பெரம்பூர்:சென்னை, வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் கண்ணன், 50. வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யும் பணி செய்கிறார். இவரது, 14 வயது மகள், தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன், அம்பத்துாரை சேர்ந்த ஸ்டூவர்ட் மாத்யூ, 17, என்பவருடன், இன்ஸ்டாகிராம் வாயிலாக மாணவிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன், 'தாயாருக்கு உடல்நலம் சரியில்லை. ஏதாவது உதவி செய்யவும்' என, மாணவியிடம், ஸ்டூவர்ட் மாத்யூ கேட்டுள்ளார். வீட்டில் இருந்த, 5 சவரன் நகை மற்றும், 75,000 ரூபாயை மாணவி எடுத்து கொடுத்துள்ளார்.தொடர்ந்து பணம் கேட்ட ஸ்டூவர்ட் மாத்யூ, பணம் தராவிட்டால், மொபைல் போனில் எடுத்து வைத்துள்ள புகைப்படங்களை வெளியிடுவேன் என, மாணவியை மிரட்டியுள்ளார்.மாணவி தன் தந்தை வழியாக அளித்த புகாரின்படி, பெரம்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, சிறுவனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை