உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வங்கி முன்னாள் ஊழியர் வீட்டில் கைவரிசை காட்டிய சிறுவன் கைது

வங்கி முன்னாள் ஊழியர் வீட்டில் கைவரிசை காட்டிய சிறுவன் கைது

அண்ணா நகர், அண்ணா நகர், எஸ் பிளாக், 18வது பிரதான சாலையை சேர்ந்தவர் ரேவதி, 63; ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். அடுக்குமாடி குடியிருப்பில், கீழ் தளத்தில் வசிக்கும் இவர், நேற்று முன்தினம் வீட்டின் கதவை திறந்து வைத்து சுத்தம் செய்துக் கொண்டிருந்தார். பூஜை அறைக்குள் இருக்கும்போது, ஹாலில் யாரோ நடமாடுவது போல் சத்தம் கேட்டுள்ளது. பார்த்தபோது, ஹாலில் இருந்த கையடக்க கணினியை சிறுவன் எடுத்துக்கொண்டு ஓடினான். அவரை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை.ரேவதி அளித்த புகாரில், அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிந்து, அயப்பாக்கத்தை சேர்ந்த, 17 வயது சிறுவனை கைது செய்தனர். விசாரணையில், பொது இடங்கள் மற்றும் பூங்கா வாசலில் நிறுத்தப்படும் சைக்கிள்களை திருடும் திருடன் என்பது தெரிந்தது. அவரிடமிருந்து, ஐந்து சைக்கிள்கள், ஒரு கையடக்க கணினியை போலீசார் பறிமுதல் செய்தனர்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ