உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோவில் பேட்டரி திருடிய சிறுவன் கைது

ஆட்டோவில் பேட்டரி திருடிய சிறுவன் கைது

ஜெ.ஜெ.நகர்:விருகம்பாக்கம், ராஜேஸ்வரி காலனியை சேர்ந்தவர் அரவிந்த், 37 ; ஆட்டோ ஓட்டுனர். இவர் கடந்த, 17ம் தேதி காலை, முகப்பேர் பேருந்து நிலையம் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அவரது ஆட்டோவில் இருந்த பேட்டரி திருடு போனது தெரிந்தது.அரவிந்த் அளித்த புகாரில், ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், ஆட்டோவில் பேட்டரியை திருடிய, 17 வயது சிறுவனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை