மொபைல்போன் திருட முயன்ற சிறுவன் கைது
சென்னை, போரூர் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு, வழித்தடம் எண், 37 ஜி பேருந்தில் ஏற முயன்ற பயணி ஒருவரிடம், 15 வயது சிறுவன் மொபைல்போனை திருட முயன்றான். இதை பார்த்த முஜாயித் பஷா, 40 என்ற ஆட்டோ ஓட்டுனர் சத்தம்போடவே, சிறுவன் தப்பி ஓட முயன்றான். சிறுவனை பொதுமக்கள் உதவியுடன் பிடித்த ஆட்டோ ஓட்டுனர், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.விசாரணையில் அந்த சிறுவன் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில், சிறுவன் அடைக்கப்பட்டான்.