உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆதனுார் ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

ஆதனுார் ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

படப்பை, படப்பை அருகே மாடம்பாக்கம், ராஜேஸ்வரி நகரை சேர்ந்த ஆரோகியசெல்வராஜ் மகன் சோஜான், 11. கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.தனது வீட்டின் அருகே வசிக்கும் நான்கு சிறுவர்களுடன், ஆதனுார் ஏரியில் மீன் பிடித்து விளையாட, சோஜான் நேற்று சென்றுள்ளான்.அப்போது, எதிர்பாராத விதமாக, சோஜான் நீரில் மூழ்கி மாயமானார். இதுகுறித்து தகவல் அறிந்து, படப்பை தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று, நீரில் மூழ்கிய சோஜான் உடலை மீட்டனர்.மணிமங்கலம் போலீசார், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை