உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் 

2வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் 

ஓட்டேரி, ஓட்டேரியைச் சேர்ந்தவர் ரிஷ்வானுல்லா, 38. இவரது மனைவி ஹபிபுனிஷா, 36. இவர்களுக்கு, ரியான், 14, மற்றும் பஹிமுல்லா, 10, என, இரண்டு மகன்கள் உள்ளனர்.கடந்த 15ம் தேதி வீட்டின் 2வது மாடியில் பஹிமுல்லா விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கால் இடறி கீழே விழுந்ததில், தலையின் பின் பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. வலது தொடையில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை அளித்த புகாரின்படி, ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி