உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறைக்குள் அடையாள அணிவகுப்பு குற்றவாளிகளை சுட்டிக்காட்டி சிறுவன்

சிறைக்குள் அடையாள அணிவகுப்பு குற்றவாளிகளை சுட்டிக்காட்டி சிறுவன்

புழல், காதல் திருமண விவகாரத்தில் கடத்தப்பட்ட சிறுவன், குற்றவாளிகளை அடையாளும் காட்டும் வகையில், புழல் சிறைக்கு நேற்று அடையாள அணிவகுப்பு நடந்தது. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த கிளாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ், தேனியை சேர்ந்த விஜயஸ்ரீ, ஏப்.,15ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனுஷின் தம்பியான சிறுவன் இந்திரச்சந்தை, ஜுன் 7ல், மர்மக் கும்பல் காரில் கடத்திச் சென்று, பின் விடுவித்தது. இந்த கடத்தல் வழக்கில், ஏழு பேர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக, புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏ.டி.ஜி.பி., ஜெயராமிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை, சிறுவன் அடையாளம் காட்டும் வகையில் நேற்று, அடையாள அணி வகுப்பு நடந்தது. இந்த வழக்கில் கைதான விஜயஸ்ரீயின் தந்தை வனராஜ், விருப்பு ஓய்வு பெற்ற காவலர் மகேஸ்வரி, கணேசன், மணிகண்டன், சரத்குமார், சுவீட்குமார், டேவிட் ஆகிய ஏழு பேர், சிறையில் இருந்த மற்ற கைதிகள் என, 20க்கும் மேற்பட்ட கைதிகளை வைத்து, அடையாள அணிவகுப்பு நடந்தது. அடையாள அணிவகுப்புக்காக பிரத்யேகமாக நிறுவப்பட்ட, கருப்பு கண்ணாடி அறைக்குள், அம்பத்துார் விரைவு நீதிமன்ற நடுவர் மகாசக்தி முன்னிலையில், பாதிக்கப்பட்ட சிறுவன் அமர வைக்கப்பட்டான். அறையின் வெளியே கைதிகள் ஒவ்வொருவராக அணிவகுத்து வந்தனர். மூன்று மணி நேரம் அடையாள அணிவகுப்பு நடந்தது. குற்றவாளிகளை, சிறுவன் அடையாளம் காட்டிதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிக்கை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என, சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ