மேலும் செய்திகள்
தெருவில் ரவுடியிசம் வாலிபர்கள் கைது
15-Jun-2025
மதுரவாயல், திருமணத்தை நிறுத்தியதால், நிச்சயம் செய்த பெண்ணை மிரட்டி மொபைல் போனில் அவதுாறு பரப்பிய காதலனை போலீசார் கைது செய்தனர்.மதுரவாயலை சேர்ந்த 26 வயது பெண், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், தன் தோழியின் சகோதரரான நவீன், 26, என்பவரை காதலித்து வந்தார். இரு மாதங்களுக்கு முன், இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது.இந்நிலையில், நவீனுக்கு போதை பழக்கும் உள்ளதை அறிந்த பெண், திருமணத்திற்கு மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த நவீன், அப்பெண்ணை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தகாத வார்த்தைகளால் பேசியதோடு, குறுஞ்செய்தி வாயிலாக கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.மேலும், அப்பெண்ணின் தோழிகள் மற்றும் உறவினர்களுக்கு, இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அனுப்பி, அவதுாறு பரப்பியுள்ளார்.இதுகுறித்த புகாரையடுத்து, மதுரவாயல் போலீசார், வழக்கு பதிவு செய்து, கொளத்துாரை சேர்ந்த நவீனை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து, அவரது மொபைல் போன் பறிமுல் செய்யப்பட்டது.
15-Jun-2025