கத்திமுனையில் மொபைல்போன் பறித்த சிறுவர்கள் கைது
பாரிமுனை:சென்னை, பாரிமுனை, பூங்கா நகர், வெங்கு செட்டி தெருவை சேர்ந்தவர் கும்பாராம், 25. கடந்த 24ம் தேதி இரவு, தன் வீட்டருகே நடந்து சென்ற போது, அவரை அவ்வழியே வந்த மர்ம கும்பல் கத்திமுனையில் மிரட்டி, மொபைல்போனை பறித்து தப்பி சென்றனர்.இதுகுறித்து பூக்கடை போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.அதில், கொருக்குப்பேட்டை, மீனாட்சி நகரை சேர்ந்த தருண், 19 மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. மூவரையும் கைது செய்த போலீசார், சிறுவர்களை சீர்திருத்த பள்ளியிலும், தருணை சிறையிலும் அடைத்தனர்.