சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
சென்னை, மணலி, பெரியசேக்காடு, வல்லபாய் பட்டேல் தெருவைச் சேர்ந்தவர், பிரகதேஷ், 17. கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இவர், நேற்று முன்தினம், மூளைச்சாவு அடைந்தார். குடும்பத்தினர் விருப்பத்தின் படி, சிறுவனின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் ஆகிய உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன. உடல் உறுப்பு தானம் செய்த சிறுவனின் உடலுக்கு, அரசு சார்பில், வடசென்னை வருவாய் கோட்டாச்சியர் இப்ராஹிம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.