உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எம்.ஜி.எம்., மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

எம்.ஜி.எம்., மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

சென்னை: எம்.ஜி.எம்., புற்றுநோய் மருத்துவமனை சார்பில், 'மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு வாக்கத்தான்' நேற்று முன்தினம் நடந்தது. சென்னை எம்.ஜி.எம்., புற்றுநோய் மருத்துவமனையில் இருந்து துவங்கிய வாக்கத்தான், அண்ணாநகர் டவர் பூங்கா அருகே நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்வை, இந்திய கடற்படை மருத்துவ சேவை பொறுப்பு அதிகாரி சர்ஜன் கமாண்டர் மோகன் டெல்கத்வார் துவக்கி வைத்தார். இதுகுறித்து, மருத்துவமனையின் புற்றுநோயியல் துறை இயக்குநர் ராஜா கூறுகையில், ''இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில், 30 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ''எனவே, மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை