மேலும் செய்திகள்
தண்டவாளத்தை கடந்தவர் ரயிலில் அடிபட்டு பலி
17-Sep-2026
புதுவண்ணாரப்பேட்டை: ரயிலில் அடிபட்டு வாலிபரின், இரு கால்களும் துண்டானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுவண்ணாரப்பேட்டை, இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் அருள், 36. இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, வ.உ.சி., ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது, சரக்கு ரயில் மோதி, அவரது இரு கால்களும் துண்டாயின. அவ்வழியே சென்றவர்கள் அளித்த தகவல் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், மயக்க நிலையில் கிடந்த அருளை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
17-Sep-2026