உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உடைந்த பாதாள சாக்கடை மூடி வாகன ஓட்டிகள் அச்சம்

உடைந்த பாதாள சாக்கடை மூடி வாகன ஓட்டிகள் அச்சம்

எண்ணுார், எர்ணாவூர் முதல் எண்ணுார் வரை, கத்திவாக்கம் நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையின், எர்ணாவூர் - முருகன் கோவில் சந்திப்பு அருகே, பாதாள சாக்கடை இயந்திர நுழைவு வழி மூடி, கனரக வாகன போக்குவரத்தால் சேதமடைந்துள்ளது.உடைந்த மூடியின் தகரம் ஒரு பக்கம் நீட்டிக்கு கொண்டிருப்பதால், நிலைதடுமாறி விழும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் வெட்டுக்காயம் அடைய வாய்ப்புள்ளது.மூன்று வாரமாக, இந்த மூடி உடைந்துள்ள நிலையில் அபாயகரமாக உள்ளதாக, வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். அதே போல், எர்ணீஸ்வரர் நகர் அருகேயும், நெடுஞ்சாலையில் இதே போன்று மூடி உடைந்து உள்ளது. அந்த பள்ளத்தை, மரக்கிளைகளை வைத்து மூடியுள்ளனர்.இரவு நேரங்களில் பயணிக்கும் புதிய வாகன ஓட்டிகள் பள்ளம் மேடு தெரியாமல், உடைந்த மூடியில் விழுந்து, உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, உடனடியாக சரி செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை