உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரூ.53 லட்சம் மோசடி அண்ணன், தம்பிக்கு காப்பு 

 ரூ.53 லட்சம் மோசடி அண்ணன், தம்பிக்கு காப்பு 

சென்னை: சென்னை அடுத்த ஆவடி, அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கோபி, 31. இவரது தந்தை அருணாச்சலம் என்பவரிடம், 2022ல், அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான மணிகண்டன், வேல்முருகன் ஆகியோர், தொழில் செய்ய பணம் வேண்டும் எனக்கூறி, 20 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளனர். அருணாச்சலம் பணத்தை கேட்டு வற்புறுத்தியதால், 5 லட்ச ரூபாயை மட்டும் திருப்பி கொடுத்துள்ளனர். மீதமுள்ள 15 லட்சம் ரூபாயை ஏமாற்றி வந்தனர். அதேபோல், ஆறு பேரிடம் 53.43 லட்சம் ரூபாய் கடனாக பெற்று ஏமாற்றியுள்ளனர். பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரை அடுத்து, ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, தலைமறைவாக இருந்த மணிகண்டன், 34, வேல்முருகன், 32, ஆகியோரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி