தாய், மகளை தாக்கிய சகோதரர்கள் கைது
சென்னை, ஆயிரம்விளக்கு பகுதியில், தாய், மகளை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். ஆயிரம்விளக்கு சுதந்திரா நகரைச் சேர்ந்தவர் மகாலட்சுமி, 64. அவரது மகள் பிரியங்கா திருமணமாகி சுதந்திரா நகர், டி பிளாக்கில் வசித்து வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன் பக்கத்து வீட்டில் வசிக்கும் சதீஷ்குமார், 27, பிரியங்கா வீட்டிற்குள் சென்று அவதுாறாக பேசி உள்ளார். பின் இரு தரப்பினரும் சமாதானமாக சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சதீஷ் குமார் மீண்டும் பிரியங்கா வீட்டின் கதவை தட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை பிரியங்காவின் தாய் மகாலட்சுமி மற்றும் சகோதரி காயத்திரி ஆகியோர் சதிஷ்குமாரிடம் தட்டிக்கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் அவரது சகோதாரர் பால்ராஜ், 32 ஆகிய இருவரும் காய்கறி வெட்டும் கத்தியால், அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரையடுத்து, ஆயிரம்விளக்கு போலீசார் சதீஷ்குமார், பால்ராஜ் இருவரையும் நேற்று கைது செய்தனர். ---------------