வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அமைச்சர் அன்பரசனின் ஏரியா மீண்டும் ஆக்கிரமிப்பு உறுதிநைனா
கட்டிடங்கள் இடிப்பையும், திமுக வையும் பிரிக்க முடியாது.
குன்றத்துார் பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், போரூர், பல்லாவரம் ஆகிய நான்கு பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் சந்திக்கும் இடமாக குன்றத்துார் உள்ளது.குன்றத்துார் முருகன் கோவிலில் முகூர்த்த நாட்களில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கின்றன. இதனால், ஒரே நேரத்தில் குன்றத்துார் நகரத்திற்குள் ஏராளமான வாகனங்கள் வந்து செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.குன்றத்துாரில் தினமும் ஏற்படும் நெரிசலை குறைக்க, ஒரு வழிப்பாதை போக்குவரத்து விதிமுறைகள், கடந்த 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியேறும் பகுதியில் ஏற்படும் நெரிசலை குறைக்க, அப்பகுதியில் இருந்த காவல் உதவி மையம், நேரக்காப்பாளர் அறை ஆகிய கட்டடங்கள், இடித்து அகற்றப்பட்டன. அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையை இடமாற்றி அமைக்கவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.இந்த கட்டடங்களை அகற்றியுள்ளதால் பேருந்து நிலையம் அருகே 20 அடியில் இருந்த சாலை 50 அடி அகலமாக விரிவடைந்துள்ளது. இதனால் பேருந்துகள் எளிதாக சென்று வர முடியும் என்பதால், நெரிசல் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் அன்பரசனின் ஏரியா மீண்டும் ஆக்கிரமிப்பு உறுதிநைனா
கட்டிடங்கள் இடிப்பையும், திமுக வையும் பிரிக்க முடியாது.