உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழிப்பறி திருடன் கைது

வழிப்பறி திருடன் கைது

ஓட்டேரி, ஓட்டேரி, குக்ஸ் சாலையை சேர்ந்தவர் விக்னேஷ்,24. இவர் பணத்தோப்பு ரயில்வே காலனி சிறுவர் பூங்கா அருகே நடந்து சென்ற போது, வாலிபர் ஒருவர் இவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, 500 ரூபாய் பறித்துச் சென்றார். இதுகுறித்த புகாரில், கொசப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ்குமாரை,30, செம்பியம் போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் உள்ளன.மற்றொருவர் கைதுபந்தர்கார்டனை சேர்ந்த அஜித் குணாநிதி, 24 என்பவர், அடிதடி மற்றும் போதை தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்து வந்தார்.அவரை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ