உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடையாறு ஸ்டேஷனில் புகுந்த பஸ்: போதை மெக்கானிக் கைது

அடையாறு ஸ்டேஷனில் புகுந்த பஸ்: போதை மெக்கானிக் கைது

அடையாறு, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குணசேகரன், 50; சென்னை மாநகர போக்குவரத்து கழக, அடையாறு பணிமனையில் மெக்கானிக்.இவர், அடிக்கடி பணிக்கு வராமலும், பணிமனைக்கு வந்தால் முறையாக பணி செய்யாமலும் இருந்துள்ளார். இதனால், 10 நாட்கள் பணியிடை நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. எனினும், தினமும் பணிமனை வந்து, போதையில் சக ஊழியர்களுடன் தகராறு செய்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, போதையில் பணிமனை வந்தவர், அங்கு பணி செய்து கொண்டிருந்த ஊழியர்களுக்கு இடையூறு கொடுத்துள்ளார். அதிகாலை 2:45 மணிக்கு, தடம் எண்: 99 என்ற பேருந்தில் ஏறி, திடீரென அதை இயக்கி முகப்பு கேட்டிற்கு வந்தார்.கேட் மூடப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளிகள், அவரை எச்சரித்து, பேருந்தை பணிமனைக்குள் கொண்டு செல்ல கூறினர். அவர்கள் பேச்சை மதிக்காத குணசேகரன், கேட்டை இடித்து, பேருந்தை அதிவேகமாக ஓட்டினார். இதில், எதிரே உள்ள அடையாறு காவல் நிலையம் சுற்றுச்சுவரில் மோதி, பேருந்து நின்றது.அந்நேரத்தில் ஆட்கள்நடமாட்டம் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஒரு காவலரின் பைக் சேதமடைந்தது.அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், குணசேகரனை பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். பின், அவர் கைது செய்யப்பட்டார். இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை, நேற்று மாலைக்குள் பணிமனை நிர்வாகம் கட்டி கொடுத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை