உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 20 கிலோ பேக் எடுத்து செல்ல பஸ்சில் கட்டணம்?

20 கிலோ பேக் எடுத்து செல்ல பஸ்சில் கட்டணம்?

சென்னை, சென்னை மாநகர பேருந்துகளில், பயணியர் எடுத்து செல்லும் 'லக்கேஜ்' அதிகரித்து வருகிறது. இதற்கு லக்கேஜ் டிக்கெட் கேட்டால், வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்நிலையில், மாநகர பேருந்துகளுக்கான லக்கேஜ் விதிமுறையில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 'டிராலி' வகை சூட்கேஸ்கள் 65 செ.மீ., அளவுள்ள சூட்கேஸ்கள் மற்றும் பைகளுக்குகட்டணமில்லை.அதற்கு மேல் உள்ள டிராலி வகை சூட்கேஸ் மற்றும் பெரிய பைகள், 20 கிலோவிற்கு மேல் எடையுள்ள சுமை, 20 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள வணிக நோக்கத்திற்காக எடுத்துச் செல்லும் சுமைகளுக்கு, ஒரு பயணிக்கான டிக்கெட் வசூலிக்க வேண்டும் என, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை