மாணவியிடம் சில்மிஷம் பேருந்து பயணி கைது
மாம்பலம்மந்தைவெளியில் நேற்று மதியம் புறப்பட்ட தடம் எண்: '12எம்' மாநகர பேருந்து, கே.கே.நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் பயணியருடன், கல்லுாரி மாணவியரும் பயணித்தனர்.பேருந்து, தி.நகர் துரைசாமி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மாணவியின் பின்னால் நின்றிருந்த நபர், அவரிடம் தவறாக நடந்து கொண்டார்.இதையடுத்து அம்மாணவியுடன் சக பயணியரும் சேர்ந்து, அந்த வாலிபரை பிடித்து, மாம்பலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்ட நபர், அசோக் நகர் நான்காவது அவென்யுவைச் சேர்ந்த ரமேஷ், 49, என்பது தெரியவந்தது.இதையடுத்து அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, போலீசார் கைது செய்தனர்.