பட்டுச்சேலை வாங்கினால் 10 சேலைகள் இலவசம் பிரியதர்ஷினியில் சலுகை
சென்னை, கே.கே.நகர் மற்றும் வேளச்சேரியில் உள்ள 'பிரியதர்ஷினி சில்க்ஸ்' 30ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. சென்னை, கே.கே.நகர் பி.வி.ராஜமன்னார் சாலை, ஆர்.டி.ஓ., மைதானம் எதிரில், 'பிரியதர்ஷினி சில்க்ஸ்' துணிக்கடை உள்ளது. பிரமாண்டமான இக்கடையில் பெண்களுக்கான பிரத்யேக பட்டுச்சேலைகள் உட்பட அனைத்து வகையான சேலைகள் மற்றும் ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கடையின் திறப்பு விழாவின்போது, பட்டுச்சேலை வாங்கியவர்களுக்கு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்பட்டது, வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இக்கடையின் 30ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, அதிரடி சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பட்டுச்சேலை வாங்கினால் 10 சேலைகள் இலவசமாக வழங்கப்படும். அதாவது, ஒரு பட்டுச்சேலைக்கான பணத்தை மட்டும் செலுத்தி 10 சேலைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகை இன்று மட்டுமே. கே.கே.நகர் கடையில் மட்டுமின்றி, வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள பிரியதர்ஷினி கடையிலும் இந்த சலுகையை பெறலாம். மேலும், ஒரு ரூபாய் மட்டுமே செலுத்தி, காஞ்சிபுரம் பட்டுச்சேலை உட்பட பல வகை பட்டுச்சேலைகளை தவணை முறையில் வாங்கும் வசதியும் உள்ளதாக, கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.