உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கல்வி கடன் மாணவர்களுக்கு அழைப்பு

கல்வி கடன் மாணவர்களுக்கு அழைப்பு

சென்னை: 'டாப்செட்கோ' திட்டத்தில் கல்வி கடன் பெற, பி.சி., - எம்.பி.சி., மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'டாப்செட்கோ' எனும் தமிழக பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தில், பல்வேறு திட்டங்கள் உள்ளன. இதில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த, 100 மாணவர்களுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி பயில கல்விக்கடன் வழங்கும் திட்டம் உள்ளது. திட்டத்தில் விண்ணப்பிக்க, www.tabcedco.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்கலாம். இந்த தகவலை, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை