உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆதரவற்ற பெண்கள் வாரியத்தில் சேர இன்றும், நாளையும் முகாம்

ஆதரவற்ற பெண்கள் வாரியத்தில் சேர இன்றும், நாளையும் முகாம்

சென்னை:சென்னையில், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்களுக்கான நல வாரியத்தில், உறுப்பினர் சேர்க்கை முகாம், 9ம் தேதியான இன்றும், 10ம் தேதியான நாளையும், சென்னை கலெக்டர் அலுவலகத்தில், காலை 11:00 மணிக்கு நடக்கிறது. குடும்ப அட்டை, ஆதார் நகல், மொபைல் போன் எண்ணை,

www.tnwidowwelfareboard.tn.gov.in

என்ற இணையதளத்தில் பதிந்து, உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.உறுப்பினராகும் பயனாளிகளுக்கு, பல்வேறு திறன் பயிற்சி, சுயதொழில் திட்டங்களில், மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்படும் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ