மேலும் செய்திகள்
கஞ்சா வியாபாரிகள் கைது; 2 கிலோ கஞ்சா பறிமுதல்
26-Jun-2025
ஏழுகிணறு:கஞ்சா பதுக்கி விற்ற வழக்கு, சினிமா உதவி இயக்குநரின் கூட்டாளிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.ஏழுகிணறு, பெரியண்ணா தெருவில் ஓ.ஜி., கஞ்சா எனும் உயர்ரக கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தண்டையார்பேட்டை, வ.உ.சி., நகரைச் சேர்ந்த சினிமா உதவி இயக்குநரான ஸ்ரீபிரேம்குமார், 32, விம்கோ நகரைச் சேர்ந்த ராஜன், 36, பிராட்வே சேர்ந்த அலெக்ஸ் சந்தோஷ், 34, ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் இருந்து, 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 750 கிராம் ஓ.ஜி., கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளான துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஆஸ்டின் இமானுவேல், 22, சைதாப்பேட்டையைச் சேர்ந்த சாலமன் டிசோசா, 21, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சில்வஸ்டர் செலஸ்டின் ராஜ், 25, மோகன், 29, ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 17 கிராம் ஓ.ஜி., கஞ்சா மற்றும் 2 கிராம் 'மெத் ஆம்பெட்டமைன்' போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, யார் யாருக்கு இந்த விவகாரத்தில் தொடர்புள்ளது என போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Jun-2025