மாணவனை வெட்டிய கஞ்சா வியாபாரி கைது
தரமணி, கந்தன்சாவடி, அண்ணா நெடுஞ்சாலையை சேர்ந்தவர் தஸ்லீம் ஷரீப், 19. பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சரத்குமார், 27.கஞ்சா வியாபாரியான சரத்குமார், தன் மீது புகார் கொடுத்தது தொடர்பாக, கடந்த 9ம் தேதி, வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்த தஸ்லீம் ஷரீப்பிடம் விசாரித்துள்ளார்.அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் ஆத்திரம் அடைந்த சரத்குமார், தஸ்லீம் ஷரீப்பை கத்தியால் வெட்டினார்.இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிந்த தரமணி போலீசார், தலைமறைவாக இருந்த சரத்குமாரை நேற்று கைது செய்தனர்.