உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த கன்டோன்மென்ட் மக்கள் கோரிக்கை 

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த கன்டோன்மென்ட் மக்கள் கோரிக்கை 

ஆலந்துார்:பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதியில், 'உங்களுடன் ஸ்டாலின்' பொதுமக்களின் குறைதீர் முகாம் நடத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.ஆலந்துார் சட்டசபை தொகுதி, பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதியில் 30,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ராணுவ வசமுள்ள இப்பகுதியை மாநில அரசுடன் இணைக்க, அப்பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து, அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனால் கன்டோன்மென்ட் பகுதியை மாநில அரசுடன் இணைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்காததால், அத்திட்டம் கிடப்பில் உள்ளது.இந்நிலையில், சென்னை மாநகராட்சியில், பொதுமக்கள் குறைகளுக்கு தீர்வுகாணும் 'உங்களுடன் ஸ்டாலின்' நிகழ்ச்சி, வார்டு வார்டாக நடத்தப்படுகிறது. ஆலந்துார் மண்டலத்தில் உள்ள 12 வார்டுகளுக்கும், இத்திட்டம் நடக்கும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், அடிப்படை வசதிகள், பல்வேறு தேவைகள், பிரச்னைகளை சந்தித்து வரும் கன்டோன்மென்ட் மக்களின் குறைகளுக்கு தீர்வு காண, அப்பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கன்டோன்மென்ட் பகுதி மக்கள் கூறியதாவது:கன்டோன்மென்ட் பகுதியில் பல ஆண்டுகளாக, அடிப்படை வசதிகள்கூட ஏற்படுத்தப்படவில்லை. அதனால் பல தேவைகளின்றி பரிதவிக்கிறோம்.'உங்களுடன் ஸ்டாலின்' பொதுமக்கள் குறைதீர் முகாமில் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என நினைத்தோம். ஆனால், பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதிக்கு முகாம் நடக்கும் தேதியும், இடமும் அறிவிக்கப்படவில்லை.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு, எங்கள் பகுதிக்கும் முகாம் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை