உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அதிகாலையில் தீக்கிரையான கார்

அதிகாலையில் தீக்கிரையான கார்

வண்ணாரப்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை, கப்பல் போலு தெருவைச் சேர்ந்தவர் கதிரவன், 44. இவர், வண்ணாரப்பேட்டையில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் தரைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், நேற்று அதிகாலை 5:00 மணியளவில், திடீரென தீப்பற்றி எரிந்தது. பகுதிமக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்ற நிலையிலும், கார் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த 5க்கும் மேற்பட்ட வீரர்கள், விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.தீ விபத்திற்கான காரணம் குறித்து, வண்ணாரப் பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை