மேலும் செய்திகள்
காப்புக்காடு பகுதியில் கவிழ்ந்த ஆம்னி பஸ்
08-Aug-2025
ஆலந்துார், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதி, குப்புற கவிழ்ந்தது. அதிலிருந்தவர், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். வடபழனியை சேர்ந்தவர் வருண், 21. கல்லுாரி படிப்பை முடித்த இவர், இசை பயின்று வருகிறார். நேற்று முன்தினம் இரவு, நங்கநல்லுாரில் உள்ள நண்பரை சந்தித்து, ஆதம்பாக்கம், தில்லைகங்கா நகர் சுரங்கப்பாதை வழியாக, காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். ஆலந்துார் நீதிமன்றம் அருகே, சாலையின் குறுக்கே ஓடிய நாயால் நிலை தடுமாறி, சாலையோர மரத்தில் மோதினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், குப்புற கவிழ்ந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், ஓடிசென்று காரில் இருந்த வருணை மீட்டனர். அவர், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து, பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
08-Aug-2025