உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையோர மரத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்

சாலையோர மரத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்

ஆலந்துார் சாலையோர மரத்தில் மோதி, கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்தது. அதிலிருந்தவர், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். வடபழனியை சேர்ந்தவர் வருண், 21. கல்லுாரி படிப்பை முடித்த இவர், இசை பயின்று வருகிறார். நேற்று முன்தினம் இரவு, நங்கநல்லுாரில் உள்ள நண்பரை சந்தித்து, ஆதம்பாக்கம், தில்லைகங்கா நகர் சுரங்கப்பாதை வழியாக, காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். ஆலந்துார் நீதிமன்றம் அருகே, சாலையின் குறுக்கே ஓடிய நாயால் நிலை தடுமாறி, சாலையோர மரத்தில் மோதினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், தலைகுப்புற கவிழ்ந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், ஓடிசென்று காரில் இருந்த வருணை மீட்டனர். அவர், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து, பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஆக 16, 2025 17:21

ரூல் நம்பர் ஒன். ரோடின் குறுக்கே நாயோ, மற்ற மிருகங்களோ வந்தால் வேகமாக ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொள்ளவும். அமெரிக்காவில் இதுதான் ரூல்.


முக்கிய வீடியோ