மேலும் செய்திகள்
மாட்டு வண்டி பந்தயம்
08-Aug-2025
சேத்துப்பட்டு:சென்னை தினத்தை முன்னிட்டு, சென்னையின் அடையாளங்களை அறியும் வகையில் நடத்தப்பட்ட புதுமையான கார் பந்தயத்தில், 80 கார்களில், 320 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில், அண்ணா நகர் பெண்கள் குழு முதலிடம் பிடித்தது. சென்னை தினத்தை முன்னிட்டு, சூப்பர் சென்னை அமைப்பு சார்பில், 'கார் ட்ரஷர் ஹன்ட்' என்ற தலைப்பில், புதுமையான கார் பந்தயம் நேற்று நடத்தப்பட்டது. சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் துவங்கிய இப்போட்டியை , அமைப்பின் நிர்வாககுழு உறுப்பினர் நவின்குமார், சுமன் வூரா ஆகியோர் துவங்கி வைத்தனர். அப்போது, நவீன்குமார் கூறியதாவது: சென்னையின் அடையாளங்களை அனைவரும் அறியும் வகையில் போட்டி கள் நடத்தப்பட்டன. போட்டியாளர்களுக்கு சில குறிப்புகள் வழங்கப்பட்டன. அதில் குறிப்பிட்டுள்ளபடி, பந்தய துாரத்திற்கு இடைப்பட்ட துாரத்தில் ஏதாவது ஒரு சினிமா தியேட்டரில் டிக்கெட் வாங்க வேண்டும். ஆட்டோவின் பதிவு எண், கடைகளில் வாங்கிய பொருட்களுடன், 'செல்பி' எடுத்து, வாட்ஸாப் எண்ணிற்கு அனுப்ப வேண்டும் என, 'டாஸ்க்'குள் தரப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். கார் பந்தயம், நுங்கம்பாக்கம், அடையாறு, கிழக்கு கடற்கரை சாலை, திருவான்மியூர், பால வாக்கம் வழியாக, வி.ஜி.பி., பொழுதுபோக்கு பூங்காவில் நிறைவடைந்தது. மொத்தம் 80 கார்களில், ஒரு குழுவுக்கு நான்கு பேர் வீதம், 320 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இடைப்பட்ட பகுதியில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட தேடுதல் பட்டியலில், ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்ட சென்னையில் அடையாளங்களை கண்டுபிடித்து, அவற்றுடன் மொபைல் போனில், 'செல்பி' படம் எடுத்து, நிர்வாகத்திற்கு அனுப்பிய அண்ணா நகரைச் சேர்ந்த பெண்கள் கீதா, ஸ்வேதா, அவரது மகள்கள் ஹர்ஷிதா, வர்ஷிதா ஆகியோர் குழு, முதலிடத்தை பிடித்தது. அவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
08-Aug-2025