உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு வாகனத்தை சேதப்படுத்திய அடையாறு இன்ஸ்., மீது வழக்கு

அரசு வாகனத்தை சேதப்படுத்திய அடையாறு இன்ஸ்., மீது வழக்கு

சென்னை,மயிலாப்பூர், கச்சேரி சாலை காவலர் குடியிருப்பில், அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமி வசிக்கிறார். இவர், தன் வீட்டைச் சுற்றியுள்ள பொது பயன்பாட்டிற்கான இடத்தை ஆக்கிரமித்து, வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க கோரி, அதே குடியிருப்பில் வசித்து வரும், காவல் துறை பாதுகாப்பு பிரிவு எஸ்.ஐ., இளையராஜா, ஏப்., 10ல், வீட்டு வசதி வாரிய தலைவர், சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினார்.தவிர, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆக்கிரமிப்பை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி, இளையராஜா வீட்டின் முன் நிறுத்தியிருந்த அவரது பயன்பாட்டில் உள்ள அரசு வாகனத்தையும், மனைவியின் வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளார். இந்த காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த பதிவின் அடிப்படையில், தன் குடும்பத்திற்கு பாதுகாப்பு கேட்டும், அரசு வாகனத்தை சேதப்படுத்திய ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரியும், மயிலாப்பூர் காவல் நிலையத்தில், எஸ்.ஐ., இளையராஜா புகார் அளித்தார். மயிலாப்பூர் போலீசார், ஆய்வாளர் ஜெயலட்சுமி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை