உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மனைவியுடன் வாழ மறுத்த கணவர் மீது வழக்கு பதிவு

மனைவியுடன் வாழ மறுத்த கணவர் மீது வழக்கு பதிவு

நொளம்பூர்,திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன், 31; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், பெங்களூருவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுடன் கடந்த, 2023ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களில், நவினின் தாய் புனிதாவுடன், இளம்பெண்ணுக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால், இருவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இளம்பெண் திருமங்கலம் மகளிர் போலீசில், கடந்த மார்ச் மாதம் புகார் அளித்தார். அதில், கணவருடன் வாழ ஆசைப்படுவதாகவும், அவர் அதற்கு மறுப்பு தெரிவிப்பதாகவும், அவர் என்னுடன் வாழ மறுத்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது. இது குறித்து விசாரித்த மகளிர் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, இருவரையும் அழைத்து பேச்சு நடத்தினார். இளம்பெண்ணுடன் சேர்ந்து வாழ நவீன் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது. இளம்பெண் கொடுத்த புகாரின்படி, நவீன், அவரது தந்தை கண்ணன், 61 மற்றும் தாய் புனிதா ஆகியோர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ