உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சொந்த குதிரையை பார்க்க விடாமல் மிரட்டிய புகார்; ரேஸ்கோர்ஸ் நிர்வாகி மீது வழக்கு பதிவு

சொந்த குதிரையை பார்க்க விடாமல் மிரட்டிய புகார்; ரேஸ்கோர்ஸ் நிர்வாகி மீது வழக்கு பதிவு

சென்னை;'எனக்கு சொந்தமான குதிரைகளைக்கூட பார்க்க விடாமல், ரேஸ் கோர்ஸ் நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' என, சரத் வருண் என்பவர் அளித்த புகார் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சென்னை சோழிங்க நல்லுாரை சேர்ந்தவர் சரத் வருண். இவர், சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி, கிண்டி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார்: நான் டி.சி.எஸ்., என்ற நிறுவனத்தில், நெட் ஒர்க் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறேன். சொந்தமாக, ஒரு கோடி ரூபாய்க்கு, 10 குதிரைகளை வாங்கி, கிண்டி ரேஸ்கோர்சில் விட்டு, 10 ஆண்டுகளாக அங்கீகாரம் பெற்ற உரிமையாளராக இருந்து வருகிறேன். இதற்கிடையே, எனக்கு சொந்தமான குதிரை ஒன்று பந்தய விதிமுறையை மீறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பரிசோதனையில் அந்த குதிரைக்கு ஊக்க மருந்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுபோன்ற விதிமீறல்களுக்கு பயிற்சியாளர்தான் பொறுப்பு. குதிரையின் உரிமையாளர் மீது குற்றச்சாட்டு சுமத்தக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. பயிற்சியாளருக்கு தண்டனையாக, ஓராண்டுக்கு எந்த குதிரைக்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என, தடை விதி க்கப்பட்டு உள்ளது. சட்டப்படி குதிரைகளின் உரிமையாளர்கள், அதன் உடல் நிலை மற்றும் பராமரிப்பு குறித்து நேரில் பார்க்கலாம். சமீபகாலமாக என் குதிரைகள் பந்தயத்தில் வெற்றி பெறாமல் இருந்து வந்தது. இதனால், என் பார்ட்னர் ஷாஜித் என்பவருடன், கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு, இந்த ஆண்டு பிப்., 21ல் என் குதிரைகளை பார்க்க சென்றேன். இது தொடர்பாக, ரேஸ்கோர்ஸ் நிர்வாகி களில் ஒருவரான நிர்மல் பிரசாத் என்பவருக்கு, இ - மெயில் வாயிலாகவும் கடிதம் அனுப்பினேன். நாங்கள் அங்கு சென்று பயிற்சியாளர்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, எங்களை மொபைல் போனில் படம் பிடித்த, ரேஸ் கோர்ஸ் நிர்வாகி அதிகாரி குமார், 'யாரை கேட்டு இங்கு வந்தீர்கள்' என, ஒருமையில் திட்டினார். அதற்குள், மற்றொரு நிர்வாக அதிகாரி வின்சென்ட் தன்ராஜ் ஆதரவாளர்கள், 10 பேர் எங்களை சூழ்ந்து கொண்டனர். வின்சென்ட் தன்ராஜை சந்தித்து முறையிட்டோம். அப்போது, 'கெட் அவுட்' என, திட்டினார். அவமானத்தில் கூனி குறுகினோம். 'உங்கள் குதிரையின் உரிமத்தை ரத்து செய்துவிடுவேன். உன்னையும், உன் குதிரைகளையும் அழித்து விடுவேன்' என, கொலை மிரட்டல் விடுத்தார். இவ் வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது. கிண்டி காவல் நிலைய போலீசார், ரேஸ்கோர்ஸ் நிர்வாக அதிகாரி வின்சென்ட் தன்ராஜ் மீது, இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரித்து வரு கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி