உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சி.பி.எஸ்.இ., பள்ளி கால்பந்து எஸ்.பி.ஓ.ஏ., கோல் மழை

சி.பி.எஸ்.இ., பள்ளி கால்பந்து எஸ்.பி.ஓ.ஏ., கோல் மழை

சென்னை,'இந்திய கால்பந்து சங்கம் ஆதரவுடன், தமிழகத்தில் இயங்கி வரும் ஆர்.எம்.கே., பள்ளி குழுமம் சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான, மாணவியருக்கான தேசிய கால்பந்து போட்டி, கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டையில் உள்ள பள்ளி மைதானத்தில், நேற்று முன்தினம் துவங்கியது.இதில், நாடு முழுதும் பல மாநிலங்களில் இருந்து, 30க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்றுள்ளன. 14, 17 மற்றும் 19 வயது என, மூன்று பிரிவின் கீழ் போட்டிகள் நடக்கின்றன.இதில், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், சென்னை எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி அணியை எதிர்த்து, ஹிமாச்சல் பிரதேசத்தின் பப்ளிக் பள்ளி அணி களமிறங்கியது. இதில், எஸ்.பி.ஓ.ஏ., அணி வீராங்கனையர், அடுத்தடுத்து கோல் மழை பொழிந்து 15 - -0 என்ற கோல் கணக்கில், இமாலய வெற்றி பெற்றனர்.தொடர்ந்து 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், கோவா கிங்ஸ் பள்ளி, மத்திய பிரதேசம் செயின்ட் ஜோசப் பள்ளிகள் இடையேயான ஆட்டம் கோல் எதுவும் இன்றி டிராவில் முடிந்தது.மேலும், 19 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில், சென்னை பி.எஸ்.சீனியர் பள்ளி அணி 2 - -0 என்ற கோல் கணக்கில், லக்னோ ராணுவ பள்ளி அணியை வீழ்த்தியது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

பி.எஸ்., பள்ளி அபாரம்

மூன்றாம் நாளான நேற்று, மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.சீனியர் பள்ளி அணியை எதிர்த்து ஓமன் நாட்டில் உள்ள இண்டியன் மாபெல்லா பள்ளி அணி களமிறங்கியது. துவக்கம் முதலே அபாரமாக விளையாடிய பி.எஸ்., பள்ளி வீராங்கனையர், 6 - -0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.அடுத்து நடந்த, 14 வயதிற்கு உட்பட்ட போட்டியில், இந்துார் வித்யா விஹார் பள்ளி அணி 5 - -0 என்ற கோல் கணக்கில், ஓமன் நாட்டின் இன்டியன் பள்ளி அணியை வீழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி