உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்ட்ரல் - அரக்கோணம்

சென்ட்ரல் - அரக்கோணம்

சென்ட்ரல் - அரக்கோணம்மின்சார ரயில் சேவை பாதிப்புசென்னை, ஜன. 25-சென்னையின் முக்கிய வழித்தடங்களில் ஒன்றாக உள்ள ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் தடத்தில், மின்சார ரயில்கள் நேற்று வழக்கம் போல் ஓடின.இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில், பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையம் அருகில், நேற்று காலை 7:00 மணியளவில், திடீர் சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே தொழில்நுட்ப பணியாளர்கள், அங்குள்ள சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து திருவள்ளூர், ஆவடியில் இருந்து சென்ட்ரலுக்கு வரவேண்டிய மின்சார ரயில்கள், ஆங்காங்கே வரிசையாக நிறுத்தப்பட்டன. இதனால் அரக்கோணம் - சென்ட்ரல் தடத்தில், 45 நிமிடங்கள் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பயணியர் அவதிப்பட்டனர்.இதுகுறித்து ரயில் நிலையங்களில், எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.காரணம் என்னவென்று தெரியாமல் ஆவடி, வில்லிவாக்கம், பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில், பயணியர் காத்திருந்தனர்.இந்த தடத்தில் காலை 7:45 மணிக்குப் பிறகே, மின்சார ரயில்கள் வழக்கம் போல் ஓடின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை