உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறந்த பொது போக்குவரத்து நகரம் சென்னைக்கு மத்திய அரசு விருது

சிறந்த பொது போக்குவரத்து நகரம் சென்னைக்கு மத்திய அரசு விருது

சென்னை: நாட்டின் சிறந்த பொதுப்போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரத்திற்கான மத்திய அரசின் விருது, சென்னைக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில், ஹரியானா மாநிலம், குருகிராமில் நேற்று, நகர போக்குவரத்து சார்ந்த கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில், நாட்டின் சிறந்த பொது போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரமாக சென்னை தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதை, மத்திய நகர்ப்புற வீட்டு வசதி துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் வழங்க, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மாநகர போக்குவரத்து கழக இயக்குநர் பிரபுசங்கர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சென்னையைச் சுற்றி 660 வழித்தடங்களில் மகளிர், பள்ளி மாணவர்களுக்கு இலவச பயணம், எலக்ட்ரானிக் டிக்கெட், டிஜிட்டல் பரிவர்த்தனை, சென்னை மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட சிறப்பம்சங்களுக்காக, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !