உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செயின் பறித்தவர் கைது

செயின் பறித்தவர் கைது

வியாசர்பாடி, வியாசர்பாடி, சாமியார் தோட்டம் 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பழனியம்மாள், 40. இவர், வியாசர்பாடி, சி - கல்யாணபுரத்தில் உள்ள 'அம்மா' உணவக ஊழியர்.வழக்கம்போல, நேற்று காலை சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார். அங்கு வந்த, 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், பழனியம்மாளை மிரட்டி, இரண்டரை சவரன் செயினை பறித்து தப்பினார்.வியாசர்பாடி போலீசார் விசாரித்தனர். இதில், கொடுங்கையூரைச் சேர்ந்த அஜய், 21, என்பவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது, ஒன்பது வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்