செயின் பறிப்பு திருடன் கைது
குரோம்பேட்டை, சென்னை வால்டாக்ஸ் சாலையை சேர்ந்தவர் ரவிகுமார், 50. அவரது மனைவி குணசுந்தரி, 48. கடந்த ஜூன் மாதம், 27ம் தேதி, தம்பதி இருவரும், தாம்பரம் இரும்புலியூருக்கு வந்து, இருசக்கர வாகனத்தில் திரும்பினர். குரோம்பேட்டை சிக்னல் அருகே சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர், குணசுந்தரி அணிந்திருந்த, 5 சவரன் செயினை பறித்து சென்றார். குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட, துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், 34, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர், 30க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர் என்பது, விசாரணையில் தெரிய வந்தது.